வேலூர் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

வேலூர் அருகே சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் பிரவீனா (17). இவர் வேலப்பாடியில் உள்ள விநாயக முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பிரவீனாவுக்கு படிப்பு சரியாக வரவில்லை என கூறப்படுகிறது. பொதுத்தேர்வு நெருங்கிவிட்டதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர் கண்டித்துள்ளனர்.

vellore gh

இதனால், பிரவீனா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கை விரக்தியடைந்த அவர் கடந்த புதன் கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர், பிரவீனா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து, தந்தை அண்ணாமலை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.