சென்னிமலை ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார்!

 
perun

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் சிறுகஞ்சி ஊராட்சியில ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு, பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் சிறுக்களஞ்சி ஊராட்சி பெரிய மாரியம்மன் கோயில் அருகே ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

peru

இந்த நிகழ்ச்சிக்கு, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய சேர்மன் காயத்ரி இளங்கோவன் தலைமை வகித்தார். சிறுக்களஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி தங்கமுத்து முன்னிலை வகித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில், சென்னிமலை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராம்ஸ் என்கிற ராமசாமி, மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, முன்னாள் தலைவர் கேந்திரசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், சிறுகளஞ்சி கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.