சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த பானிப்பூரி கடை உரிமையாளர் கைது!

 
rape

திருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த பானிப்பூரி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பூரிக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதே பகுதியில் பானிப்பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், செந்தில்குமார், கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

arrest

அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசரித்துள்ளனர். அப்போது, சிறுமி நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.