பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பி.டி.7 யானை... மயக்கஊசி செலுத்தி பிடித்த கேரள வனத்துறை!

 
pd7 elephant

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பி.டி.7 காட்டுயானையை, நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோணி மலைக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பி.டி. 7 என்ற காட்டுயானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. சமீபத்தில் அந்த பகுதியில் நடை பயிற்சி சென்ற சிவராமன் என்பவரை பி.டி. 7 யானை தாக்கி கொன்றது. மேலும், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் காட்டுயானை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

pd 7

இதனை அடுத்து, பி.டி.7 யானையை வனத்துறையினர் தீவிரமாக கவனித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். காட்டுயானையை பிடிக்கும் பணியில் வனத்துறை கால்நடை மருத்துவர் அருண் சக்ரியா தலைமையில் 75 பேர் கொண்ட குழு ஈடுபட்டது. பிடி 7 யானையை வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், கும்கி யானை உதவியுடன் அந்த யானையை வனத்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

பிடிபட்ட பி.டி.7 யானையை அதே பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கூண்டில் அடைத்து வைத்து கும்கி யானையாக மாற்ற பயிற்சி கொடுக்க உள்ளதாக, கேரள வனத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 7 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுவந்த பிடி7 யானை பிடிபட்டதால் தோணி பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.