காலிங்கராயன் வாய்க்கால் திறக்கப்பட்ட தினத்தையொட்டி, செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் மரியாதை!

 
sengottayan

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் வாய்க்கால் திறக்கப்பட்டு இன்றுடன் 740 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொங்கு 24 நாடுகளில் பூந்துறை நாடு வெள்ளோட்டை தலைமையிடமாக கொண்ட பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர் காளிங்கராயன். கி.பி. 1,271 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் அணைகட்டி வாய்க்கால் வெட்டும் பெரும் பணியை தொடங்கினார் காலிங்கராயன். 12 ஆண்டுகள் பணி முடித்து கி.பி. 1,283 ஆம் ஆண்டு தை மாதம் 5ஆம் தேதி காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்டு இன்றுடன் 740 ஆண்டுகள் நிறைவடைகின்றது. வாய்க்கால் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், இந்த வாய்க்கால் பாசனத்தை நானும் எனது சந்ததியரும் பயன்படுத்த மாட்டோம் என சபதம் செய்து சொந்த மண்ணான வெள்ளோட்டில் இருந்து வெளியேறினார். அவர் கட்டித் தந்த வாய்க்கால் அவர் பெயரிலேயே அழைக்கப்பட்டது. 

senkottayan

இந்த நிலையில்,  காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்டு இன்றுடன் 740 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அதிமுக சார்பில் காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான  செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் பெருந்துறை எம்எல்ஏவும், சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே செல்வராஜ், விஜயன் என்கிற கே ராமசாமி, ராம்ஸ் என்கிற ராமசாமி, மாவட்ட பொருளாளர் கே பி எஸ் மணி,  இளைஞர் அணி வேட்டுவபாளையம் அருணாச்சலம்,  மகளிர் உமா நல்லசாமி, விவசாய அணி சாமிநாதன், பாசறை பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.