காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி ஈரோட்டில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

 
congress

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கிய 138-வது ஆண்டு நிறுவன தினத்தையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கிய 138-வது ஆண்டு நேற்று நாடு முழுவதும் அக்கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று  கட்சி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் கட்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவகர் அலி தலைமை வகித்தார். 4ஆம் மண்டல தலைவர் எச்.எம். ஜாபர் சாதிக், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, முன்னாள் கவுன்சிலர் கை சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர்  திருச்செல்வம் கலந்துகொண்டு கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். 

cong

இந்த நிகழ்ச்சியில்,  துணை தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, அரவிந்தராஜ், செல்வம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கராத்தே யூசுப், கனகராஜன், சச்சிதானந்தம்,  சிறுபான்மை பிரிவு சூர்யா சித்திக், துணைத் தலைவர் பாஷா,  ஊடகப்பிரிவு பிரவீன், இளைஞர் காங்கிரஸ் ஜூபேர் அகமது, அமீர்கான், சூரம்பட்டி வார்டு தலைவர் விஜயகுமார், வாட்டர்  சிவாஜிகணேசன், வள்ளிபுரத்தாம்பாளையம் தங்கவேலு, ஞானபுரம் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பியபடி ஈ.வி.கே சம்பத் சாலை வரை நடந்துசென்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.