ஆடி அமாவாசையையொட்டி, சென்னிவீரம்பாளையம் கெண்டத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

 
kendathu mariamman

ஆடி அமாவாசையையொட்டி கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சென்னிவீரம்பாளையம் கெண்டத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆடி அமாவாசையை ஒட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள  சென்னிவீரம்பாளையம் கெண்டத்து மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, முதலில் ஆலய கணபதி மற்றும் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, கெண்டத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி அமாவாசை  சிறப்பு வழிபாட்டில் காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கெண்டத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.