கள்ளக்காதல் விவகாரத்தில் முதியவர் அடித்துக்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது!

 
murder

திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையை உருட்டு கட்டையால் அடித்துக்கொன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த என்.பஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் பால்ராஜ். இவரது மனைவி நிர்மல் நித்யா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தாமஸ் பால்ராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த நிர்மல் நித்யா உடன் அவரது தந்தை அருள்நாதன் தங்கி வந்துள்ளார்.இந்த நிலையில, நிர்மல் நித்யாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் சந்திரசேகர் என்பருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. 

dgl gh

இந்த நிலையில், ஒரு மாதமாக நிர்மல் நித்யா, சந்திரசேகருடன் தொடர்பை கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், தன்னுடன் தொடர்பில் இருந்தபோது வாங்கிய பணம், பொருட்களை திருப்பித்தரக் கோரி நிர்மல் நித்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை மீண்டும் இதுதொடர்பாக நிர்மல் நித்யாவின் வீட்டிற்கு சென்று தகாறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நிர்மல் நித்யாவின் தந்தை அருள்நேசன், தனது மகளிடம் அடிக்கடி தகராறு செய்வதாக கூறி உருட்டு கட்டையால் தாக்க முயன்றுள்ளார்.

அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், அவரிடம் இருந்த கட்டையை பிடிங்கி அருள்நாதனை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அருள்நேசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சின்னாளப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளி சந்திர சேகரை கைது செய்தனர்.