மாப்பிள்ளை பிடிக்காததால் செவிலியர் விஷம் சாப்பிட்டு தற்கொலை... விராலிமலை அருகே சோகம்!

 
poison

விராலிமலை அருகே மாப்பிள்ளை பிடிக்காததால் செவிலியர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஆவூர் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் பானுப்பிரியா(19). இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பானுபிரியாவிற்கு அவரது பெற்றோர் இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பானுபியா சம்பத்தன்று வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

viralimalai

அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதால் பெற்றோர் விசாரித்தபோது எலி பேஸ்ட் சாப்பிட்டதை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று பானுபிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை நடராஜ், மாத்துர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.