விழுப்புரத்தில் நவ.17-ல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
agri

விழுப்புரம் கோட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - விழுப்புரம் கோட்டத்தில் கோட்ட அளவிலான நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் (17.11.2022) அன்று காலை 11 மணியளவில் விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

vilupuram

மேற்படி, நடைபெறும் கூட்டத்தில் விழுப்புரம், விக்கரவாண்டி, வானுர், திருவெண்ணைநல்லுர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.