விருதுநகரில் நவ.15-ல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
virudhunagar virudhunagar

விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட 3 வருவாய் கோட்டங்களில்,  கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது :- விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 15.11.2022 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. 

paddy farm

மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்துகொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.