விழுப்புரம் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

 
villupuram collector

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார் மற்றும் தகவல்களுக்கு 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கான 2022 கட்டுப்பாட்டு அறை 24 *7 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 *7 மணி நேரமும் இயங்கி வரும் மாவட்ட அவசர கால மையத்தின்  தொடர்பு எண் 1077, 04146 223265. மேலும், 7200151144 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் பொதுமக்கள் வடகிழக்கு பவருவ மழை, புயல், வெள்ள பாதிப்புகள், மழைநீர் தேங்கி நிற்பது போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.  

vilupuram

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், 3 நகராட்சி அலுவலகங்களிலும் 24 *7 மணி நேரமும் இயங்கி வரும் புயல் கட்டுப்பாட்டு அறை அவசரகால மையத்தின் தொடர்பு எண்கள் :

வட்டங்கள் வாரியாக கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைபேசி எண்கள் : விழுப்புரம் - 04146 222554, 9445000525,  விக்கிரவாண்டி - 04146 233132, 9655750073, வானுர் - 0413 2677391, 9445000526, திண்டிவனம் - 04147 222090, 9445000523, மரக்காணம் - 04147 239449, 9445461915, செஞ்சி - 04145 222007, 9445000524, மேல்மலையனுர் - 04145 234209, 9344578941, கண்டாச்சிபுரம் - 04153 231666, 9443048924, திருவெண்ணைநல்லுர் - 04153 234789, 9486186829.

நகராட்சிகள் வாரியாக கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைபேசி எண்கள் : விழுப்புரம் - 04146 222206, 7397389327, திண்டிவனம் - 04147 225161, 7397389326, கோட்டக்குப்பம் - 0413 2237062, 9150375343.