திருமணமான 3 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை... அரியலூர் அருகே சோகம்!

 
suicide

அரியலூர் அருகே திருமணமான 3 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள இடையத்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ராஜாராம் (26). தொழிலாளி. இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் செட்டித்திருக்கோணம் பகுதியை சேர்ந்த வசந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் ராஜாராம் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ராஜாராமின் குடும்பத்தினர் கோவிலுக்கு சாமி குடும்பிடுவதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.

keelapalur

தரிசனம் முடித்து இரவு அவர்கள் வீட்டிற்கு திரும்பியபோது ராஜாராம் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனர். அப்போது, இடையத்தான்குடி அடுத்த அரனூரில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் ராஜாராம் சடலமாக தொங்கினார். இதனை கண்டு உறவினர்கள் தகறி அழுதனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ராஜாராம் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.