ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் நேரில் வாழ்த்து பெற்ற ஈரோடு காங்கிரஸ் புதிய நிர்வாகி!

 
evks

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை, அக்கட்சியின் புதிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவராக சூர்யா சித்திக் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனையொட்டி, ஈரோடு குடியரசு இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா ஆகியோரை இன்று நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி சூர்யா சித்திக் ஆசி பெற்றார். அவருக்கு  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

congress
தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி, விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி,  எஸ்சி பிரிவு துணைத் தலைவர் குளம் எம் ராஜேந்திரன்,  ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்ஷத், துணைத் தலைவர் அம்மன் மாதேஷ், சிறுபான்மை துறை கேஎன் பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.