திருவாரூரில் ஆக.8-ல் தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்!

 
thiruvarur collector

திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை தமிழ்நாடு தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற உள்ளதாக, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர்  பயிற்சி  சேர்க்கை  முகாம் (PMNAM) திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையில் உள்ள தமிழ்நாடு தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 08.08.2022 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

Image

இதில் திருவாரூர், கோயம்புத்துர் மற்றும் சென்னையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழிற் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். எனவே, இம்முகாமில் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI)பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு, 9943064455 மற்றும் 04365 - 250126 என்ற தொலைபேசி எண்ணிலும், adcentretvr@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பெறலாம், ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.