மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்பு!

 
mdu

மதுரை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

மதுரை மாநகர காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆணையராக சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக பணிபுரிந்து வந்த நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இன்று நரேந்திரன் நாயர், மதுரை மாநகர காவல் ஆணையராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு, பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

mdu

காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த நரேந்திரன் நாயர், ஜல்லிக்கட்டு, சித்திரை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைதியாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும், மதுரை மாநகரில் ரவுடியிசம், போதைப்பொருள் ஆகியவை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த நரேந்திரன் நாயர், 2005ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்தவராவர். முன்னதாக, சென்னை தலைமையிட டி.ஐ.ஜி. ஆகவும், கோவை சரக டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார்.