தருமபுரியில் நம்ம செஸ் நம்ம பெருமை நிகழ்ச்சி... 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

 
chess

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதையொட்டி, தருமபுரியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் செஸ் விளையாண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை 44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மகளிர் பங்கேற்ற நம்ம செஸ் நம்ம பெருமை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சிறு வணிகம் செய்யும் மகளிர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

chess

இந்த போட்டியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெண்கள் ஆர்வமுடன் செஸ் விளையாண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக பயிற்சியாளர்கள் மூலம் அவர்களுக்கு செஸ் விளையாடுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.