தனியார் நிறுவனத்தில் மோட்டார் பம்ப் சரிந்து தொழிலாளி பலி... கோவையில் பரிதாபம்!

 
dead

கோவை துடியலுரில் தனியார் நிறுவனத்தில் மோட்டார் பம்பு சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கீரனுர் பகுதியை சேர்ந்தவர் மாறன் மகன் தங்கராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் கோவை துடியலுர் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார்.  இந்த நிலையில், சம்பவத்தன்று தங்கராஜ் நிறுவனத்தில் துய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மோட்டார்கள் அடுக்கியிருந்த ரேக்கினை, மேற்பார்வையாளர் மணி டிராலி முலம் துக்கியுள்ளார்.

coimbatore gh

அப்போது, எதிர்பாராத விதமாக ரேக் சரிந்து, பணியில் ஈடுபட்டிருந்த தங்கராஜ் மீது விழுந்தது. இதில் பலத்த காயடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, அஜாக்கிரதையாக பணியில் ஈடுபட்ட மேற்பார்வையாளர் மணி, வடமாநில தொழிலாளி சரண் பக்கத் ஆகியோர் மீது துடியலுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.