பிரசவத்தின்போது தாய், குழந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு... தென்காசியில் சோகம்!

 
dead

தென்காசி மாவட்டம் சுந்தர பாண்டியபுரம் அருகே பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சுந்தர பாண்டியபுரம் அடுத்த தட்டாங்குளத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகள் சங்கீதா(23). இவருக்கு, கடந்த 1 வருடத்திற்கு முன் சுரண்டை பகுதியை சேர்ந்த சிவா உடன் திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதா, பிரசவத்திற்காக தட்டாங்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் பிரசவத்திற்காக சுந்தரபாண்டியபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கீதாவிற்கு நேற்று இரவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது.

tenkasi gh

இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்துள்ளது. தொடர்ந்து, சங்கீதாவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.  பிரசவத்தில் தாயும், சேயும் பலியான சம்பவம் தட்டாங்குளம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.