காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்... அரியலூரில் சோதனை ஓட்ட முறையில் உணவு தயாரிக்கும் பணி துவக்கம்!

 
ariyalur

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அரசுப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சோதனை ஓட்ட முறையில் உணவு தயாரிக்கும் பணியை ஆட்சியர் ரமண சரஸ்வதி துவங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 464 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. ஜெயங்கொண்டம் நகராட்சி மேலக்குடியிருப்பு அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சோதனை ஓட்ட முறையில் உணவு தயாரிக்கும் பணியை ஆட்சியர் ரமண சரஸ்வதி துவங்கி வைத்தார்.

ariyalur

மேலும், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிற்றுண்டி வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சிற்றுண்டிகளை மாணவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கவும், சமைத்த உணவை பள்ளிகளுக்கு வாகனம் மூலம் கொண்டு சென்று மாணவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.