தென்காசி அருகே 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி... ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்!

 
calf

தென்காசி மாவட்டம் மேலக்கலங்கல் கிராமத்தில் 6 கால்களுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகிறார். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி. விவசாயி. இவரது மனைவி தெய்வானை. இத்தம்பதியினர் தங்களது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் சினையுற்ற பசு மாடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் பசு கன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்று குட்டிக்கு வழக்கத்திற்கு மாறாக 6 கால்கள் இருந்ததால் சின்னமணி குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். முன் கால் பகுதியின் மேல் பகுதியில் 2 கால்கள் கூடுதலாக உள்ளது.

calf

இதனை அறிந்த மேலக்கலங்கல் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன், அந்த கன்று குட்டியை பார்வையிட்டு செல்கின்றனர். இது தொடர்பாக பேசிய கால்நடை மருத்துவர்கள், பிறவி குறைபாடு காரணமாக அந்த கன்றுகுட்டி கூடுதல் கால்களுடன் பிறந்துள்ளதாகவும், அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் என்றும் தெரிவித்தனர்.