ஈரோட்டில் சேதமடைந்த அரசுப்பள்ளி கட்டிடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

 
erode

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பழுதடைந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை வீதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் மற்றொரு கட்டிடம் அமைந்து உள்ளது. இங்கு 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. கடந்த 3ஆம் தேதி, இப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தில் இருந்த சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்,  பழுதடைந்த பள்ளி கட்டிடத்தினை மராமத்து பணிகள் செய்வும், கழிப்பறை வசதி செய்து கொடுக்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நநத

இந்த நிலையில், சேதமடைந்த பள்ளிக்கட்டிடத்தை இன்று அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பழுதடைந்து காணப்படும் கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனறும், மாணவிகளின் தேவைக்காக கழிப்பறை வசதிகளும் செய்து கொடுக்கவும் வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும், பள்ளிக்கு ஒரு வழி பாதை மட்டுமே உள்ளதால் மற்றொரு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் முத்துசாமி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்ந்து, கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர முத்துசாமி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார் உட்பட பல்வேறு காட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.