எடப்பாடி பழனிசாமி உடன் ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு

 
erode

அதிமுக தலைமை அலுவலகம் வந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு கூட்டம் நடத்தியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது, அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   

edappadi

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, ஈரோடு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டைன், கே.சி.கருப்பணன் ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி மற்றும் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.