சென்னிமலையில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் சென்னிமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இதனை அடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

sennimalai

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த இளைஞரின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஜெயக்குமார்(19) என்பது தெரியவந்தது. இவர் குமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் மருத்துவம் படித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் அவர் எதற்காக சென்னிமலை வந்தார் என்றும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலையில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.