மணப்பாறை நகராட்சி : திமுக - அதிமுக இடையே இழுபறி!

 
manapparai manapparai

மணப்பாறை நகராட்சியில் அதிமுக, திமுக கூட்டணி தலா 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவு கிடைப்பவர்கள் தான் நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக 1, 2, 4, 6,10, 12,13, 18, 22, 26, 27 ஆகிய 11 இடங்களில் வென்றுள்ளது. அடுத்தப்படியாக, திமுக 5, 7, 8, 11, 17, 23, 24, 25 ஆகிய 8 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ் 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றுள்ளன. 

counting

மேலும்,  5 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.அதிமுக மற்றும் திமுக கூட்டணி தலா 11 இடங்களில் வென்றுள்ளதால், சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரிக்கும் கட்சியை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.