தனியார் நிறுவனத்தில் காப்பர் ஒயர்களை திருடிய நபர் கைது: 15 கிலோ காப்பர் ஒயர்கள் பறிமுதல்!

 
krishnagiri

கிருஷ்ணகிரி அருகே தனியார் நிறுவனத்தில் காப்பர் ஒயர்களை திருடிய நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 15 கிலோ காப்பர் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிறுவனத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்து காப்பர் வயர்களை திருடிக் கொண்டிருந்தார். அதனை கண்டு அந்த நிறுவன தொழிலாளர்கள், அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் நிறுவனத்தில் இருந்து சுமார் 15 கிலோ அளவிலான காப்பர் ஒயர்களை திருடியது தெரிய வந்தது.

copper wire

இதனை அடுத்து, தொழிலாளர்கள் அந்த நபரை உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் உத்தனப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்த ஏழுமலை (28) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 15 கிலோ காப்பர் ஒயர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.