திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கடத்திய நபர் கைது... ரூ.17.96 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்!

 
lottery

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கடத்திய நபரை கைது செய்த எஸ்பி தனிப்படை போலீசார், அவரிடமிருந்து ரூ.17.97 லட்சம் மதிப்புள்ள 22,120 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், எஸ்.பி., தனிப்படை போலீசார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழனியில் இருந்து மணப்பாறை நோக்கி சென்ற பழனியை சேர்ந்த காளிராஜ் (57) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஏராளமான இருப்பது தெரிய வந்தது.

arrest

இதையடுத்து காளிராஜை கைதுசெய்த எஸ்பி தனிப்படை போலீசார், அவரிடமிருந்து ரூ 17,96,900 மதிப்புள்ள 22,120 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காளிராஜ் மற்றும் பறிமுதலான லாட்டரி சீட்டுக்களை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்..