கீழ்பெண்ணாத்தூர் அருகே வீட்டில் குட்கா பதுக்கிய நபர் கைது - 8 கிலோ குட்கா பறிமுதல்!

 
kilpennathur

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே விற்பனைக்காக வீட்டில் குட்காவை பதுக்கிவைத்திருந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 8 கிலோ குட்கா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள  ராயம்பேட்டை கிராமத்தில் உள்ள வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

kilpennathur

அப்போது, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் (48) என்பவர், கோவிந்தசாமி என்பவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்த  8.500 கிலோ குட்காவையும், குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை விற்பனைக்காக பதுக்கிய கங்காதரன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.