மாரண்டஅள்ளி அருகே ஜெலட்டின் குச்சிகளை வைத்து மீன்பிடித்த நபர் கைது!

 
dd

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி மீன்பிடித்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னாற்றில் ஜெலட்டின் குச்சிகளை வைத்து சட்டவிரோதமாக சிலர் மீன்பிடிப்பதாக, மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார், மாரண்டஅள்ளி அருகே உள்ள சாமியார் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்றிருந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (29 ) என்பது தெரியவந்தது.

marandahalli

மேலும், அவர் வைத்திருந்த பையில் பாறைகளை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணையில், பெரியண்ணன் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி ஆற்றில் மீன்பிடித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, மாரண்டஹள்ளி போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.  மேலும், அவரிடம் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.