விஜயமங்கலம் தேர்த் திருவிழாவில் பங்கேற்ற நாட்டு மாட்டிற்கு தங்கக்காசு வழங்கிய எம்எல்ஏ!

 
vijayamangalam

பெருந்துறை அருகே விஜயமங்கலம் விஜயபுரி கோவில் தேர் திருவிழா மாட்டுத்தாவணியில் கலந்துகொண்ட நாட்டு மாட்டுக்கு, அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் ஒரு பவுன் தங்க காசு வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் ஸ்ரீவிஜயபுரி அம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. திருவிழாவையொட்டி குதிரைச் சந்தை மற்றும் மாட்டுத் தாவணி நடைபெற்றது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் உள்ளிட்ட ஏராளமான நாட்டு மாடுகள் கலந்து கொண்டன.

erode

இந்த போட்டியில் குலுக்கல் முறையில் ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாடு சிறந்த நாட்டு மாடாக தேர்வு செய்யப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் தனது சொந்த நிதியில் இருந்து ஒரு பவுன் தங்க நாணயத்தினை வழங்கினார்.