மொடக்குறிச்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ சரஸ்வதி!

 
சரஸ்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.14.95 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய ரேஷன் கடைக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி அடிக்கல் நாட்டினார்.  

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட காகம் ஊராட்சி பாரப்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க வலியுறுத்தி, அந்த பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் ஏற்று மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அவர்களின்  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  ரூ.14.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி, நேற்று பாப்பாரபாளையம் கிராமத்தில் நடைபெற்ற பூமி பூஜையில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி கலந்து கொண்டு ரேஷன் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

சரஸ்

இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட பொதுச் செயலாளர்கள் வேதானந்தம், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட செயலாளர் பரமசிவம், ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ், மண்டல பொதுச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமணன், தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்மேகம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் (எ) சுப்பிரமணி, காகம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், துணைத் தலைவர் அரங்கநாயகி, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர், அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சியின் தூய்மை காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.