ஊத்துக்குளி ஒன்றியத்தில் ரூ.63 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார்!

 
peru

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.63 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை, பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், சட்டப்பேரவை பொது நிறுவன குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.  

அதன்படி, ஊத்துக்குளி ஒன்றியம் அ.பெரியபாளையம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் பேருந்து நிறுத்தும் அருகில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.  அ.பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கேடிகே நகர் பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சக்திவேல் நிதி ஒதுக்கீடு 7.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. எஸ். பெரியபாளையம் ஊராட்சியில் பெரியபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. 

peru

இதேபோல், பல்லவராயன் பாளையம் ஊராட்சி, அணைப்பாளையம் பிரிவில் மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல் நிதி ஒதுக்கீட்டில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. ரெட்டிபாளையம் ஊராட்சி கரைப்பாளையம் பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினர் மோகன் நிதி ஒதுக்கீடு ரூ.7 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. புத்தூர் பள்ளபாளையம் ஊராட்சியில் துணை சேர்மன் சிவகுமார் நிதியிலிருந்து 8.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நடுப்பட்டி ஊராட்சி, பள்ள கவுண்டன்பாளையம் இந்திரா நகரில், துணை சேர்மன் சிவகுமார் நிதி ஒதுக்கீடு ரூ.8.50 லட்சம் செலவில் மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நடுப்பட்டி ஊராட்சி சொட்ட கவுண்டன் பாளையம் பகுதியில், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல் நிதி ஒதுக்கீடு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

peru

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே. சக்திவேல், பேரூர் செயலாளர் வி.கே.சின்னசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வில்லன், அப்புசாமி,  சேகர், பழனிசாமி,  சரஸ்வதி, முன்னாள் சேர்மன்  கேவிஎஸ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி, ஊத்துக்குளி ஒன்றிய துணை சேர்மன் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் மோகன சுந்தரி மாணிக்கம், நடராஜ், ஒன்றிய செயலாளர் தனசேகர்,  மாவட்ட பொருளாளர் கே பி எஸ் மணி, பேரூர் செயலாளர் சரண் பிரபு, இலக்கிய அணி கோவி கருப்புசாமி, ஓட்டுனர் அணி கோபி கிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் தெய்வசிகாமணி, மல்லுசாமி, விவசாய அணி சாமிநாதன், மூர்த்தி, குன்னத்தூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பூங்கொடி சுப்பிரமணியம், மாணவரணி ராஜேஷ் குமார், இலக்கிய அணி பன்னீர்செல்வன், வழக்கறிஞர் பிரிவு சிவ ரஞ்சித், மந்திரி கருப்புசாமி, பாசறை சங்கர், ஓட்டுநர் அணி சிவகுமார், அம்மா பேரவை தயாளன், பாசறை பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.