பெருந்துறை அருகே சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார்!

 
peru

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் மருத்துவமனை சார்பில் நடந்த மருத்துவ முகாமை அதிமுக எம்எல்ஏ எஸ் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பொன்முடி கிராமத்தில் நந்தா சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜே.கே. மூங்கில் காற்று அறக்கட்டளை இணைந்து இன்று காலை சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினர். பொன்முடி அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், அம்மா பேரவை மாநில இணை செயலாளருமான எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களுக்கு  நந்தா சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையை வழங்கினர்.

perun

இந்த முகாமில், பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் விஜயலட்சுமி சாமிநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் உமா நல்லசாமி, பொன்முடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு, துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.