பெருந்துறை தொகுதிக்குட்பட்ட 110 குடும்பங்களுக்கு அமரும் இருக்கைகள் வழங்கிய எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார்!

 
perun

அதிமுக பொன்விழா ஆண்டை  முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட 110 குடும்பங்களுக்கு, எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் இலவச அமரும் இருக்கைகளை வழங்கினார்.

அதிமுகவின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை ஓட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட 135 ஆதி திராவிடர் காலனிகளுக்கு, வீடுகள் தோறும் தலா 4 அமரும் இருக்கைகள் வழங்க திட்டமிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஜெயக்குமார், தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வருகிறார். இதுவரை 10-க்கு மேற்பட்ட ஆதிராவிடர் காலனிகளுக்கு அமரும் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பொங்கல் விழாவை முன்னிட்டு கம்பளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, பள்ளக்காட்டுப்புதூர் ஆதிராவிடர் காலனியில் உள்ள 42 குடும்பங்களுக்கு 120 அமரும் இருக்கைகளும், நாகப்ப கவுண்டன்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 68 குடும்பங்களுக்கு வீடு தோறும் தலா 4 அமரும் சேர்கள் வழங்கப்பட்டது.

perun

இதனை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமா எஸ்.ஜெயக்குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் விஜயன் என்கிற ராமசாமி,  ராம்ஸ் என்கிற ராமசாமி, கம்பிளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி,  பொன்முடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல், கலைப்பிரவு ராஜேஸ்வரி, மாணவர் அணி சிதம்பரம், பாசறை ஒன்றிய தலைவர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்