பெருந்துறை ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்த எம்.எல்.ஏ ஜெயக்குமார்!

 
peru

பெருந்துறை ஒன்றியம் தோரணவாவி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை, அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார்  இன்று தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோரண வாவி ஊராட்சியில் இன்று ரூ.30 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு தோரணவாவி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். பெருந்துறை ஒன்றிய குழு துணை தலைவர் உமா மகேஸ்வரன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் விஜயன் என்கிற ராமசாமி,  அருள்ஜோதி கே செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினருமா எஸ். ஜெயக்குமார் கலந்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

peru

இதன்படி, ஓடக்காடு ஆதிதிராவிடர் காலனி கடைசி வீதி, மாரியம்மன் கோவில் வீதி, கொல்லர் வழுவு ஆதிராவிடர் காலனி முதல் வீதி ஆகிய 3 இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் தோரண வாவியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடமும், வேலம்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு சமையலறையில் கூடிய இருப்பறையும் கட்டுமான பணியும் தொடங்கப்பட்டது. முன்னதாக ஓடக்காடு ஆதி திராவிடர் காலனியில் உள்ள அண்ணமார் கோயிலை புனரமைக்க, தனது சொந்த நிதியில் இருந்து 25 ஆயிரம் ரூபாய், எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் வழங்கினார.

இந்த நிகழ்ச்சியில்,  எம்ஜிஆர் மன்றம் திங்களூர் எஸ் கந்தசாமி, பொருளாளர் கேபிஎஸ் மணி, போலநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், விவசாய அணி சாமிநாதன், அருள் பிரகாஷ், செங்கோடன், அருளானந்தம், தண்டபாணி  உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.