குன்னத்தூர் ஆதியூரில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஜெயக்குமார்!

 
peru

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் ஆதியூர் பகுதியில் ரூ.11 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை, பெருந்துறை எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ளது ஆதியூர் தாத்திகாடு. இந்த பகுதியில் புதிதாக அதிகளவில் குடியிருப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மின் தட்டுப்பாடை சமன் செய்யும் பொருட்டு மின்வாரியம் சார்பில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 100 கிலோ வாட் மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று தாத்திகாடு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், அம்மா பேரவை இணை செயலாளருமான எஸ். ஜெயக்குமார் பங்கேற்று, மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

peru

இந்த நிகழ்ச்சிக்கு, மின்சார வாரிய நிர்வாக பொறியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். வெள்ளியம்பதி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அதிமுக ஊத்துக்குளி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள் ராமசாமி, மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராசப்பன், அம்மா பேரவை ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.