பெருந்துறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ ஜெயக்குமார்!

 
peru

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 279 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பெருந்துறை எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டு, பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 279 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

free cycles

இந்த நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் பிசி சுப்பிரமணியம், கல்யாணசுந்தரம், பல்லவி பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருந்துறை அதிமுக ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் விழாவிற்கு தலைமை வகித்தார். இந்த விழாவில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் சால்வை அணிவித்து. கேடயம் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, மகளிர் அணி உமா நல்லசாமி, இளைஞர் அணி வேட்டுவபாளையம் அருணாச்சலம், மாணவரணி மணிகண்டன், விவசாய பிரிவு சாமிநாதன், வர்த்தக அணி கருப்பட்டி ராஜேந்தர், தகவல் தொழில் நுட்ப அணி மோகன் பிரசாத், அம்மா பேரவை ரவிக்குமார், மகளிர் அணி மோகனாம்பாள், ராஜா, குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.