எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் - கோவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் மரியாதை!

 
cbe

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி கோவை அவினாசி சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுனன், ஜெயராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

admk

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு எம்எல்ஏவுமான அம்மன் அர்ச்சுனன் தலைமையில் சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராம், முன்னாள் மேயர் வேலுசாமி உள்ளிட்ட  100-க்கும் மேற்பட்டோர்  ஊர்வலமாக புறப்பட்டு அவினாசி சாலை அண்ணா சிலை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலையை வந்தடைந்தனர்.

தொடர்ந்து, எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுனன், ஜெயராம் தலைமையில், எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து,  இதய தெய்வம் மாளிகையில் உள்ள எம்ஜிஆரின் உருவ படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.