பெருந்துறையில் எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

 
peru

எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி பெருந்துறை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ எஸ் ஜெயக்குமார் வழங்கினார்.  

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை முதல் இரவு வரை நடைபெறற அனைத்து நிகழ்வுகளிலும் பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

peru

இதன்படி, காலை சென்னிமலை அடுத்த சிறுக்களஞ்சி ஊராட்சி கரட்டுப்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு அவர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, பெருந்துறை குன்னத்தூர் நால்ரோடு சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, பெருந்துறை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு அவர் மாலை அணிவித்து, நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் சர்க்கரை பொங்கலும், சுண்டலும் வழங்கினார். மேலும், விஜயமங்கலம் கிரே நகரில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி, காசி பிள்ளம்பாளையம் மற்றும் பள்ளக்காட்டூர் பகுதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய எம்எல்ஏ ஜெயக்குமார், செங்கப்பள்ளி அருகே உள்ள மகிழ்ச்சி கருணை இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு போர்வை வழங்கியும, சுள்ளிப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்

peru

இந்த நிகழ்வுகளில் அதிமுக நிர்வாகிகள் அருள்ஜோதி கே செல்வராஜ், விஜயன் என்கிற ராமசாமி, வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், ராம்ஸ் என்கிற ராமசாமி,  கே எம் பழனிசாமி, கல்யாணசுந்தரம், சிவசுப்பிரமணியம்,  கமலக்கண்ணன்,  பூபாலகிருஷ்ணன்,துரைசாமி,  முன்னாள் எம்எல்ஏ கே சி பொன்னுதுரை, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி துரைசாமி, துணை சேர்மன் உமா மகேஸ்வரன், பொருளாளர் கே பி எஸ் மணி,  மைனாவதி கந்தசாமி, அப்புகுட்டி, திங்களூர் கந்தசாமி, ஓ.ஆர். பழனிசாமி, டிடி ஜெகதீஷ், ஏ கே சாமிநாதன், உமா நல்லசாமி,  மணிகண்டன், மாட்டின் ராஜ், தங்கவேல், பொன்னுச்சாமி, போட்டோ மோகன், ரொட்டி பழனிசாமி, சாமிநாதன், ஹிட்டாச்சி பாலு,  சுள்ளிப்பாளையம் விஸ்வநாதன், கம்பளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், பெரிய வீரசங்கிலி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி சிவக்குமார், திருப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு,  ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர் குணசேகரன், பால் சதீஷ், மோகனாம்பாள், மோகனச்செல்வி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.