பென்னாகரத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த லாரி ஒட்டுநர் கைது!

 
arrest

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 16 வயது சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த லாரி ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வெள்ளாறு வெல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சண்முகம்(27). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சண்முகம், மேட்டூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.  கடந்த 2 மாதங்களுக்கு முன் சிறுமி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த சண்முகம், சிறுமியை கடத்திச்சென்று காட்டாய திருமணம்  செய்து கொண்டுள்ளார்.

pennagaram

சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தை தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சண்முகத்தை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.