ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மக்களை தேடி டயாலிசிஸ் திட்டம் துவக்கம்!
ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மக்களைத் தேடி டயாலிசிஸ் என்றும் புதிய திட்டத்தை மொடக்குறிச்சி எம்எல்ஏ மருத்துவர் சரஸ்வதி துவக்கி வைத்தார்.
ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மக்களை தேடி டயலிஸிஸ் வாகனம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மைய துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில், மருத்துவமனை இயக்குனர் மற்றும் ஈரோடு இந்திய மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர் சரவணன், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சை மையத்தை துவங்கி வைத்தனர்.
இத்திட்டம் குறித்து பேசிய மருத்துவர் சரவணன் கூறியதாவது:- சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள். வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வர இயலாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று டயாலிசிஸ் செய்வதற்கு. டயாலிசிஸ் கருவி மற்றும் ஆர்ஓ பிளான்ட் உடன் இணைந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை நெப்ரோ பிளஸ் நிறுவனம், நாட்டில் 120 இடங்களில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் போனில் அழைத்தால் வாகனம் இல்லங்களுக்குச் சென்று டயலிசிஸ் செய்யப்படும். இங்கு இருப்பவர் டெல்லி போன்ற இடங்களுக்கு சென்றாலும் அங்குள்ள நெப்ரோ ப்ளஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டால், அந்த வசதி கிடைக்கும்.

தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோன்று, அபிராமி கிட்னி கேர், சென்னை எம்ஜிஎம் ஹெல்த் கேர் நிறுவனத்துடன் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை துவக்கி உள்ளது. பொதுவாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மிக மோசமாக கல்லீரல் பழுதடைந்து உள்ளது. அவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் கல்லீரல் பாதிப்பு இருப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். எனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவர்களுக்கு அவசியமாகும். தற்போது இங்குள்ளவர்கள் சென்னைக்கு செல்கிறார்கள். அதிநவீன வசதியை ஈரோட்டிலேயே கிடைக்க அந்த புதிய மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த வசதியையும், காப்பீடு திட்டத்தின் கீழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை தலைவர் மருத்துவர் தங்கவேலு, மருத்துவர்கள் பூர்ணிமா, கோபிநாத், கார்த்திக் மதிவாணன் மற்றும் இந்திய மருத்துவ சங்க ஈரோடு மாவட்ட தலைவர் மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


