காதல் தோல்வியால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை... சாத்தூர் அருகே சோகம்!

 
suicide

சாத்தூர் அருகே காதல் தோல்வியால் தீப்பெட்டி ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சந்தன கருப்பசாமி(24). இவர் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், சந்தன கருப்பசாமி, தனது உறவுக்கார பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

sattur

மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த சந்தன கருப்பசாமி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.