பவானிசாகரில் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தொழிலாளி தற்கொலை... நோய் கொடுமையால் விபரீதம்!

 
dead

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நோய் கொடுமையால் கூலி தொழிலாளி பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (51). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், தனது தம்பியான பாலமுரளி கிருஷ்ணா என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் புண் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் கடந்த 1 வருடமாக கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் புண் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால், கடந்த 24ஆம் தேதி மாரியப்பனை, பால முரளி கிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து வீட்டு அழைத்து சென்றுள்ளார்.

generic erode

இந்த நிலையில், கால் புண்ணில் ஏற்பட்ட வலியால் அவர் அவதிபட்டு வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை வலி அதிகமானதால் விரக்தியடைந்த மாரியப்பன் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.