சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் அஞ்சலி!

 
குறிஞ்சி

ஈரோட்டில் சுதந்திர போரில் ஈடுபட்ட தமிழ் குறிஞ்சி நில குறவர் பழங்குடிகளுக்கு, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஈரோட்டில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று 4-வது ஆண்டாக சுதந்திர போரில் ஈடுபட்ட தமிழ் குறிஞ்சி நில குறவர் பழங்குடிகளான பெரிய ஆம்பிள்ளை குறவனார், சுந்தர குறவனார் உள்ளிட்ட 7 வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாநில தலைவர் குறிஞ்சி சந்திரசேகரன் தலைமையில் கட்சியினர் வீர வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார். இதில் அதிமுக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி ராமலிங்கம், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு மற்றும் பாஜக முன்னாள் பழங்குடியினர் அணி தலைவரும், தேசிய எஃகு துறை இயக்குனருமான வழக்கறிஞர் இராமசாமி, மாநில செயலாளர் டாக்டர் சுமதி அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிஞ்சி

மேலும், குறிஞ்சி தமிழர் விடுதலை இயக்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் திலகவதி, திராவிடத் தமிழ் இலக்கிய மன்ற நிறுவன தலைவர் ஐயப்பன், தமிழ் புலி கட்சி ஈரோடு மாநகர செயலாளர் சலீம் பாஷா, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு ஈரோடு மாநகர பொறுப்பாளர்கள் ராஜ், ஈஸ்வரமூர்த்தி, பவானி ஒன்றிய பொறுப்பாளர்கள் தண்டபாணி, மோகன்ராஜ், கொடுமுடி ஒன்றிய பொருளாளர் மாணிக்கம், அம்மாபேட்டை ஒன்றியப் பொறுப்பாளர்கள் கேசவன், முருகேசன், மகளிர் ருக்குமணி, ராதா, சரோஜா மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலர்தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் வி.கே சுப்பிரமணியம் நன்றி கூறினார்