திருப்பூரில் பிளஸ் 2 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை... தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி, மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரும், முதலிபாளையம் பகுதியை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி ரியாஸ் அகமது (23) என்பவரும் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியாஸ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

arrest 

இந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த ரியாஸ் அகமது மற்றும் அவருடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டு திருப்பூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரியாஸ் அகமது மாணவியை கடத்திச்சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் ரியாஸ் அகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.