பொங்கல் தொகுப்பில் வழங்கவுள்ள பொருட்களை ஆய்வுசெய்த காஞ்சிபுரம் ஆட்சியர்!

 
kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் மற்றும் தொகுப்பு பொருட்களை ஆட்சியர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 635 நியாய விலைக்கடைகளின் மூலம் 3,93,204 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. இப்பணியை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பங்காரும்மன் தோட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் விநியோகிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு  பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனையும் அவர் வழங்கினார்.

pongal package 

தொடர்ந்து, சிறுகாவேரிப்பாக்கம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் நியாய விலைக்கடைகளுக்கு அனுப்ப வைக்கப்பட்டு உள்ள பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் தரத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியவதி தேவி, பொது விநியோக திட்ட துணை பதிவாளர் மணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.