காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் ஆர்த்தி!

 
kanchi

காஞ்சிபுரத்தில் 2023ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டார். இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 13.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் இன்று வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆர்த்தி வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,38,654. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,51,480. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,86,994. இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 180.

மேலும், 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு புதியதாக வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவின்படி 29.ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1394 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

kanchipuram

காஞ்சிபும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் (5.01.2023-ன்படி) விவரம் பின்வருமாறு:- 28. ஆலந்தூர் - 3,86,251, ஆண்கள் - 1,90,858, பெண்கள் - 1,95,336, இதர - 57; 29. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - 3,69,833, ஆண்கள் - 1,79,638, பெண்கள் - 1,90,135, இதர - 60; 36. உத்திரமேரூர் - 2,68,405, ஆண்கள் - 1,29,282 , பெண்கள் - 1,39,080, இதர - 43; 37. காஞ்சிபுரம் - 3,14,165, ஆண்கள் - 1,51,702, பெண்கள் - 1,62,443, இதர - 20.

இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மைங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் /  வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.