இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு... முன்னாள் படைவீரர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் அழைப்பு!

 
collector namakkal

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், இந்திய விமான நிலைய ஆணையத்தில் (Air ports Authority of India) காலியாக உள்ள Junior Assistant (Fire Service) -19, Junior Assitant (office) - 01, Senior Assistant (Accounts)- 02 மொத்தம் 22 காலிப்பணியிடங்களை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பிட இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

airports authority of india

 தகுதியும் விருப்பமும் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் www.aai.aero இணையதள முகவரியில் 30.09.2022-க்குள் விண்ணப்பிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.