திருவண்ணாமலையில் மரம் விழுந்ததில் நகைக்கடை மேலாளர் பலி!

 
dead body

திருவண்ணாமலையில் பண்ணை வீட்டில் தென்னை மரம் விழுந்ததில் நகைக்கடை மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவர் நகைக் கடை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள நகைக்கடை உரிமையாளர் வீட்டில் மரம் வெட்டும் பணி நடைபெற்றது. இந்த பணிக்கு முனிசாமி, தனது கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆறுமுகம்(50), முருகன்(44) ஆகியோரை அழைத்து சென்றிருந்தார். அங்கு தென்னை மரம் ஒன்றை அறுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முனிசாமி உள்ளிட்டோர் மீது மரம் விழுந்தது.

tiruvannamalai gh

இதில் பலத்த காயமடைந்த முனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார், முனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.