வடமதுரை அருகே மரத்தின் மீது ஜீப் மோதி விபத்து - பெண் உள்பட இருவர் பலி!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோர மரத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் ஊட்டியை சேர்ந்த பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி குழுசோலை பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ்(37). இவர் தனது குடும்பத்தினர் நித்தியா (28), அழகு மணி(55), லதுன்(7) ஆகியோருடன் ஊட்டியில் இருந்து ஜீப்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்னர் 4 பேரும் மணப்பாறை நோக்கி ஜீப்பில் சென்றுள்ளனர். வடமதுரை அடுத்த கெச்சானிபட்டி என்ற இடத்தில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ், அழகுமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபக உயிரிழந்தனர்.

vadamadurai

நித்தியா, சிறுவன் லதுன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்தில் பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.